நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் விதிகள் மீறப்படுகின்றனவா, கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் விதிகள் மீறப்படுகின்றனவா, கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

தனிமைப்படுத்தல் விதிகள் மீறப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் பொதுச் சேவை நிறுவனங்களுக்குள் உள் நுழைவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அனுசரணையில் பொதுச் சேவை வழங்குநர்களின் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரி பார்க்க சிவில் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விசேடமாக கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் வர்த்தமானி அறிவித்தலின் படி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மூன்று முக்கியமான விடயங்களைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்களுக்கு உள் நுழைந்த உடன் கை கழுவுதல், வெப்ப நிலையைப் பரிசோதித்துப் பார்த்தல், அலுவலகங்களுக்கு உள்நுழைவதற்கு முதல் புத்தகத்தில் குறித்த நபர்களின் விடயங்களைக் குறிப்பிட வேண்டும் மற்றும் எந்த நேரமும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

இது போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொலிஸார் சிவில் உடையில் உள்நுழைவார்கள்.

இதனால் நீங்கள் இலங்கையில் எந்தப் பிரதேசங்களில் இருந்தாலும் தொடர்ந்தும் மேலே கூறிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தொழில் வழங்கும் நிறுவனங்களிடம் இந்த சுகாதார வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad