தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 358 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 358 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், 24 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டம் இன்னும் அமுலில் உள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு பொதுமக்கள் அனுசரணை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஒரு சிலர் குழுக்களாக சட்டத்தை மீறியமை தெரியவந்துள்ளது. இந்நிலையில், ட்ரோன் கெமராக்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களைக் கண்காணிக்க விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் கெமராக்கள் ஈடுபடுத்தப்படும்.

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், குறித்த நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடடிவக்கை எடுக்கப்படும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment