துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு : பாதுகாப்பு அமைச்சு - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு : பாதுகாப்பு அமைச்சு

(க.பிரசன்னா)

2021 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான அனுமதியினையும் புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான அனுமதியை புதுப்பிப்பதற்கான கால எல்லை 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட குறித்த புதுப்பித்தல் செயற்பாட்டை 2020 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்த போதிலும் இலங்கையில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காராணமாக அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால எல்லை 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான துப்பாக்கிகள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகியிருந்தாலும் மீள் புதுப்பித்தலுக்கான அபராதம் விதிக்கப்படமாட்டாதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad