அனைத்து அலுவலக ரயில் சேவைகளும் நாளை முதல் இயக்கப்படும் - தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுள்ள பகுதிகளில் நிறுத்தப்படாது - News View

About Us

About Us

Breaking

Sunday, November 8, 2020

அனைத்து அலுவலக ரயில் சேவைகளும் நாளை முதல் இயக்கப்படும் - தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுள்ள பகுதிகளில் நிறுத்தப்படாது

மேல் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் அனைத்து அலுவலக ரயில்களையும் நாளை முதல் இயக்கப் போவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படாத பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது புகையிரத பொது முகாமையாளர் டிலந்தா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி நாளை தொடக்கம் காலை, மாலை அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும். 

மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பிரதேசங்கள் அடையாளப்படுப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் ரயில் சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய பின்வரும் புகையிரத நிலையங்களில் புகையிரதங்கள் தரிக்காது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பிரதான வழித்தடம்
தெமட்டகொடை உப புகையிரத நிலையம்
களனி புகையிரத நிலையம்
வனவாசல உப புகையிரத நிலையம்
எந்தரமுல்லை உப புகையிரத நிலையம்
ஹொரபே உப புகையிரத நிலையம்
ராகமை புகையிரத நிலையம்
வல்பொல உப புகையிரத நிலையம்
பட்டுவத்த உப புகையிரத நிலையம்

புத்தளம் வழித்தடம்
பேரலந்த உப புகையிரத நிலையம்
ஜா-எல புகையிரத நிலையம்
துடெல்ல உப புகையிரத நிலையம்
குடஹகபொல உப புகையிரத நிலையம்
குரண புகையிரத நிலையம்
நீர்கொழும்பு புகையிரத நிலையம்
கட்டுவ உப புகையிரத நிலையம்

கரையோர வழித்தடம்
பாணந்துறை புகையிரத நிலையம்
பின்வத்த புகையிரத நிலையம்

களனிவெளி வழித்தடம்
பேஸ்லைன் புகையிரத நிலையம்
கெட்டாரோட் உப புகையிரத நிலையம்

வடக்கு வழித்தடம்
குருணாகல் புகையிரத நிலையம்
முத்தெட்டுகல உப புகையிரத நிலையம்

No comments:

Post a Comment