ஏழு புதிய தூதுவர்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

ஏழு புதிய தூதுவர்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது

வெளிநாட்டுத் தூதுவர்களாக சேவையாற்ற இலங்கை அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட ஏழு புதிய தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் உயர் பதவிகள் பற்றிய குழு நேற்று கூடியது. இதன்போதே ஏழு புதிய தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, அஹமட்.ஏ.ஜவாட் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், அருனி ரணராஜா நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், தர்ஷன பெரேரா சுவீடனுக்கான இலங்கைத் தூதுவராகவும், எம்.கே.பத்மநாதன் எகிப்துக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிப்பதற்கான அனுமதி இதன்போது வழங்கப்பட்டது.

மேலும், எஸ்.டி.கே.சேமசிங்ஹ போலாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், சி.ஈ.சமிந்த.ஐ.கொலன்னே தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் நியமிப்பதற்கான அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டது.

சமல் ராஜபஷ, நிமல் சிறிபால டி. சில்வா, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமேஷ் பதிரன, சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, விதுர விக்ரமநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment