மக்கள் கருணா மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் - அவரை அரசியல்வாதியாக நான் கணக்கெடுப்பதில்லை, அவர் ஒரு ‘காமடி பீஸ்’ : இராஜாங்க அமைச்சர் வியாேழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

மக்கள் கருணா மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் - அவரை அரசியல்வாதியாக நான் கணக்கெடுப்பதில்லை, அவர் ஒரு ‘காமடி பீஸ்’ : இராஜாங்க அமைச்சர் வியாேழேந்திரன்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் அவரது பிறந்த நாளான இத்தினத்தில் அவர் தலைமையில் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு இலச்சம் வேலை வாய்பு என்பது நாட்டின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டவாறு அந்த வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போது 34 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாம் மூன்றாம் கட்டம் வழங்கப்படவுள்ளது.

கருணா ஒரு கருத்தை வெளியிட்டதை சில ஊடகங்கள் வாயலாக பார்த்தேன். மட்டக்களப்பில் இருக்கின்ற அமைச்சர் அந்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்துக்கு 20 ஆயிரம் ரூபா வாங்கி வேலை வாய்ப்பு கொடுத்துள்ளதாக அவர் சொல்லியுள்ளார்.

ஒரு 5 ரூபா பெறுமதியான விண்ணப்பபடிவம். இதனை பிரதேச செயலகங்களில் எடுத்து அவர்கள் விண்ணப்பித்து அந்த வறுமைக் கோட்டில் உள்ளவர்கள் அந்த வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். எனவே இது ஒரு வகையான பெறாமையின் வெளிப்பாடு.

கருணா என்பவின் பெயரை நான் எங்கும் பாவித்ததில்லை. காரணம் என்னவென்றால் அவர் மக்கள் மத்தில் பிரபல்யமானவர்களின் பெயரை உச்சரித்து தான் பிரபல்யமாகிக் கொள்ள வேண்டும் என நினைக்கின்ற ஒருவர்தான் அவர். ஆகவே அவர் என்ன பேசினாலும் கணக்கெடுப்பதில்லை நான்.

தேர்தல் காலத்தில் எனது வீட்டை வைத்து பேசினார். இங்கு தையல் மெசினில் கேட்டார் படுதோல்வி. அம்பாறையில் கேட்டு அங்கும் தோல்வி. அவருடைய பேச்சு ஒரு காமடியான பேச்சு. உடைப்போம் எறிவோம் அடிப்போம் இது எல்லாம் ஜனநாயத்துக்கு மாறான செயற்பாடு. அவரை நான் ஒரு அரசியல்வாதியாகவும் கணக்கெடுப்பதில்லை. ஒரு மனிதனாகவும் கணகெடுப்பதில்லை. அவர் ஒரு காமடி பீஸ்.

என்னை பெறுத்தமட்டிலே எமது மாவட்ட மாகாண மக்களிடம் இவர் தொடர்பான சில குற்றச்சாட்டுக்கள் இருந்தது. எனவே இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும். காரணம் நாட்டினுடைய ஜனாதிபதி நீதித்துறையில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டும். சட்டம் சரியான முறையில் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றார்.

ஆகவே கருணா போன்றவர்களுடைய சில்லறைத்தனமான சில்லூட்டுத்தனமான பேச்சுக்களுக்கு பதிலளிக்கக் கூடாது. காரணம் எங்களை வைத்து அவர்கள் பிரபல்யமாகி விடுவார்கள். 20 ஆயிரம் ரூபா விண்ணப்பத்துக்கு நான் வாங்கியதாக கருணா நிரூபித்தால் எனது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குவேன் அதேவேலையை கருணா அதனை நிரூபிக்காவிடால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்.

எனது தமிழர் முற்போக்கு அமைப்பு உறவுகள் யாராவது அதை வாங்கிருந்தால் அது வாங்கப்பட்டவர் முறையீடு செய்யலாம். அவ்வாறு எங்களுக்கு தெரியவந்தால் எங்கள் கட்சி சார்ந்த நடவடிக்கையை தயங்காது எடுப்போம். இருந்தபோதும் இவர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment