பசில் பாராளுமன்றம் வருவது தொடர்பான முடிவு அவரது கரங்களில் - விருப்பத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என்கிறார் மகிந்த - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

பசில் பாராளுமன்றம் வருவது தொடர்பான முடிவு அவரது கரங்களில் - விருப்பத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என்கிறார் மகிந்த

பாராளுமன்றத்திற்கு செல்வது குறித்த முடிவை பசில் ராஜபக்‌ஷவே எடுப்பார் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்‌ஷ தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அவர் தான் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் இது முற்றுமுழுதாக அவரே தீர்மானிக்க வேண்டிய விடயம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டியுள்ள போதிலும் பசில் ராஜபக்‌ஷ இன்னமும் இந்த விடயத்தில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்னமும் அவரின் தீர்மானத்திற்காக காத்திருக்கின்றோம், அவருக்கு இது குறித்து தீர்மானிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுகின்றது போல தோன்றுகின்றது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad