சிலாபம் பொது மீன் சந்தை மூடப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Friday, November 20, 2020

சிலாபம் பொது மீன் சந்தை மூடப்பட்டது

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சிலாபம் பொது மீன் சந்தை ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்தார்.

சிலாபம் பொது மீன் சந்தைக்கு வருகை தந்தோரில் 50 பேருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலாபம் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சிலாபம் நகர சபை கட்டத்தில் நேற்று (20) நடத்திய விஷேட கலந்துரையாடலின் போதே, பொது மீன் சந்தையை ஒரு வார காலத்திற்கு மூடவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், சிலாபத்திலுள்ள மீனவர்கள் மீன்களை சிலாபம் நகரிலுள்ள துறைமுகத்துக்கு அருகில் விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment

Post Bottom Ad