கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத் திட்டத்திற்கான குடிநீர் நிலுவை கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு ! - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத் திட்டத்திற்கான குடிநீர் நிலுவை கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு !

நூருல் ஹுதா உமர் & லாபிர் சரஜூன்

கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி குடியேற்ற வீட்டுத் திட்டத்தில் குடிநீர் கட்டணம் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக பிரேரணை ஊடாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். நிசார் ஜே.பி அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களின் வேண்டுதலின் பிரகாரம் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இன்று (27) கல்முனை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மக்கள் முகம் கொடுக்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் பாவனை நீர் பட்டியல் நிலுவை தொகை அதிகரித்து காணப்படுவதினை சீர்படுத்தும் முகாமைத்துவம் சம்பந்தமான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.

இக்கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் ஹபிபுல்லாஹ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம். நிசார் மற்றும் ஏ.சி.எம்.சத்தார் மற்றும் சட்டத்தரணி ஆரியா காரியப்பர் கலந்து கொண்டதுடன் கல்முனை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பிராந்திய முகாமையாளர் பாவா மற்றும் தேசிய நீர் வழங்கல் கல்முனை பிரதேச பொறியியலாளர் எம்.எம்.பாயிக் கல்முனை தேசிய நீர்வழங்கல் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.முனைவர் மற்றும் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட தற்போதைய கமிட்டி தலைவர் ஏ.சி.கலிலுர் ரஹ்மான் மற்றும் கபூல் ஆசாத் ஹாஜி மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலா காலம் நீண்டு சென்று தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் இந்த குடிநீர் நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்ட பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக அங்கு குடியிருக்கும் சுமார் 440 குடும்பங்களுக்கும் நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கூட்டம் இடம்பெற்றது.

இதில் கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் இப்பிரச்சினைக்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தற்போதைய நிலைப்பாடு இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கல்முனை பிரதேச கணக்காளர் ஹபிபுல்லாஹ் அவர்களினால் இதற்கான கணக்கு அறிக்கைகள் மற்றும் தற்போது தேவைப்படும் நிலுவைத் தொகைகள் இவ்வாறான மதிப்பீடுகள் அங்கு வந்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் அங்கு வந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உயரதிகாரிகளும் இதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்க உள்ளதாகவும் கூறிக் கொண்டதுடன் இதன்போது திடமான முடிவினை எடுக்கும் பிரகாரம் பிரதேச செயலாளரின் பூரண கண்ணோட்டத்தில் அவரது வழிகாட்டலில் கணக்காளர் நியமிக்கும் நீர் மானிவாசிப்பாளர்களைக் கொண்டு இதற்கான பணத்தினை சமுர்த்தி வங்கியில் புதிய கணக்கொன்றினைத் திறந்து அதில் வைப்பிலிட்டு அதனை மூலம் பிரதேச செயலாளர் மூலமாக தேசிய நீர்வழங்கல் அலுவலகத்திற்கு எந்த தடங்கலும் இல்லாமல் மாதாந்த கட்டணத்தினை வழங்குவதற்கு தீர்மானம் எடுத்து ஏகமனதாக அனைவரது பூரண சம்மதத்துடன் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment