சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்வு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளதாக கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு கொரோனா கொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலும் 87 பேர் கொரோனா தொற்றாளர்களாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 63 பேர் வெலிகடை சிறைச்சாலை கைதிகள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment