சீதுவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட எட்டு பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, November 26, 2020

சீதுவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட எட்டு பேருக்கு கொரோனா

சீதுவ, ரத்தொலுகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சீதுவை நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் சுரேஷ் குமார தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான குடும்பத்தில் ஒரு வயது குழந்தையும் அவரது தாயும் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுரேஷ் குமார மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 04 மணி வரை முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 71 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5,094 ஆக பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார ஏப்பா தெரிவித்தார்.

இவ்வாறு பதிவான 71 நோயாளர்களில் 18 பேர் வத்தளை சுகாதார பிரிவிலும், 10 பேர் பியகம சுகாதார பிரிவிலும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மாலை வரை கம்பஹா மாவட்டத்தில் 76,246 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார ஏப்பா தெரிவித்தார்.

No comments:

Post a Comment