மலசலகூடக் குழியில் வீழ்ந்து 6 வயதுச் சிறுமி மரணம் - வவுனியாவில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

மலசலகூடக் குழியில் வீழ்ந்து 6 வயதுச் சிறுமி மரணம் - வவுனியாவில் சம்பவம்

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மலசலக்கூடத்திற்கு வெட்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து 6 வயதுச் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (10) மதியம் இடம்பெற்றுள்ளது. பன்றிக்கெய்தகுளத்தைச் சேர்ந்த சத்தியசீலன் சஜீவினி எனும் சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள இவர்களின் வீட்டிற்குள் மழை நீர் உட்சென்றதால், வீட்டுக் கூரைக்குத் தேவையான மரங்கள் வெட்டுவதற்காக தந்தையும், தாயும் வெளியில் சென்ற நிலையில் மூன்று சிறுவர்கள் வீட்டில் இருந்துள்ளனர்.

இவ்வேளையில் வீட்டு வளாகத்தில் மலசலக்கூடத்திற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் மழை நீர் நிரம்பி இருந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான 6 வயதுச் சிறுமி, மலசலக்கூடக் குழியினுள் வழுக்கி வீழ்ந்துள்ளார். 

இதனையடுத்து குறித்த சிறுமியை மீட்ட அயலவர்கள், வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அதற்கு முன்னதாகவே சிறுமி உயிரிழந்து விட்டார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசாரும், திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad