மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 5 மில்லியன் டொலர் பரிசு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 5 மில்லியன் டொலர் பரிசு

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 5 மில்லியன் டொலர் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி தாஜ் ஹோட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். 300 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினர் சஜித் மிர். இவர் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ஆவார்.

இந்நிலையில், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டொலர் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க நீதித்துறை திட்டத்திற்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய உறுப்பினர் சஜித் மிர். மும்பையில் கடந்த 2008 நவம்பர் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி. இவனை கைது செய்ய உதவினாலோ அல்லது அவரைப் பற்றி தகவல் அளித்தாலோ 5 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment