5000 ரூபாய் நிவாரண நிதியையும் அரசியலாக்கியுள்ளனர், எதிர்கட்சியின் யோசனைகளை அரசாங்கம் குறைத்து மதிப்பிடுகிறது - கின்ஸ் நெல்சன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

5000 ரூபாய் நிவாரண நிதியையும் அரசியலாக்கியுள்ளனர், எதிர்கட்சியின் யோசனைகளை அரசாங்கம் குறைத்து மதிப்பிடுகிறது - கின்ஸ் நெல்சன் எம்.பி.

(செ.தேன்மொழி)

எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் அனைத்து யோசனைகளையும் அரசாங்கம் குறைத்தே மதிப்பிட்டு வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் குற்றம்சாட்டினார். இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் செயற்பட்டு வரும் சுகாதார பிரிவினரை தனது ஸ்டத்திற்கு இடமாற்றம் செய்துவரும் ஆளும் தரப்பினர், 5000 ரூபாய் நிவாரண நிதியையும் அரசியலாக்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலையை சுகாதார பிரிவினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து சிறந்த முறையில் கட்டுப்படுத்தியிருந்தனர். 

அப்போதைய சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவும் சிறந்த முறையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். எனினும் அரசாங்கம் அவரை இந்த பதவியிலிருந்து மாற்றியுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதவி உயர்வு வழங்கியதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அவருக்கு பதவி உயர்வு வழங்குவதாயின் சுகாதார பிரிவில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் சுற்றாடல் துறைக்கே அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 

இதேவேளை, சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்ட ஜயருவன் பண்டாரவையும் தற்போது சுகாதார அமைச்சர் இந்த பதவியிலிருந்து நீக்கியுள்ளார். அரசாங்கம் தனது தனிப்பட்ட விருப்பத்தில் இவ்வாறான முடிவுகளை எடுத்து வருகின்றது.

ஐயாயிரம் ரூபாய் நிவாரணம் பணம் வழங்கும் போதும் கிராம சேவகர்கள் மற்றும் அரச ஊழியர்கள் சிறந்த முறையில் அவற்றை வழங்கி வந்தனர். இந்த செயற்பாடுகளிலே பிரதேச சபை உறுப்பினர்கள் தேவையற்ற முறையில் தலையிட்டதன் காரணமாக அதில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் நாம் சிறந்த யோசனைகளை முன்வைத்தாலும் அதனை ஆளும் தரப்பினர் குறைத்தே மதிப்பிட்டு வருகின்றனர்.

இன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு அவசியமான பசளைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் முறையான செயற்பாடுகள் எதுவும் இல்லை. இன்று யானை மனிதன் மோதலினால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை எதற்கும் அரசாங்கம் தீர்வு காணவில்லை. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றி கொள்வதில் மாத்திரமே இவர்களுக்கு அக்கறை இருந்தது.

இன்று ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாடு தொடர்பிலும் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் பொலனறுவை மாவட்டத்தில் சிறிய அளவிலான அரிசி ஆலைகள் பல காணப்பட்டன. எனினும் தற்பொது ஆளும் தரப்புடன் தொடர்புகொண்டுள்ள இரிவரே பாரியளவிலான ஆலைகளை வைத்துள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடியும் இவர்களால் நியாயமான விலைக்கு அரிசியை பெற்றுக் கொடுக்க முடியாமல் போயுள்ளது.

No comments:

Post a Comment