இலங்கையில் கொரோனா தொடர்பான 4 மரணங்கள் பதிவாகியுள்ளன. மூன்று பெண்கள், ஒரு ஆண் ஆகிய நால்வரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 30 கொரேனா காரணமான மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது இன்று (07) மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அமைய, இலங்கையில் இதுவரை 34 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில்,
31ஆவது மரணம்
கொழும்பு 10 (மாளிகாவத்தையை) ஐச் சேர்ந்த, 42 வயதான பெண் ஒருவர், நீண்ட காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், இருதய நோயுடனான கொவிட்-19 தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
32ஆவது மரணம்
கொழும்பு 10 (மாளிகாவத்தையை) ஐச் சேர்ந்த, 69 வயதான பெண் ஒருவர், நீண்ட காலமாக பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று நோயுடனான நியூமோனியா நிலை உச்சமடைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
33ஆவது மரணம்
வெல்லம்பிட்டி பிரதேச்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், நீண்ட காலமாக நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு சில நாட்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடனான நியூமோனியா நிலை உச்சமடைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
34ஆவது மரணம்
கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 88 வயதான பெண் ஒருவர், மினுவாங்கொடை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியுள்ளதோடு, தனிமைப்படுத்தல் வேளையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, லக்கல பல்லேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது நோயின் உக்கிரம் காரணமாக, அங்கொடை தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று நியூமோனியாவுடனான இரத்தம் விசமடைதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கடந்த வியாழக்கிழமை, நவம்பர் 05 ஆம் திகதி இலங்கையில் 4 (27 - 30ஆவது) கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தன.
இலங்கையில் கொரோனா தொற்றியோரின் மரணங்கள்
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.
12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.
13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
16ஆவது மரணம், ஒக்டோபர் 25ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 02 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
17ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 41 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
18ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 19 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
19ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொம்பனித்தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
20ஆவது மரணம், ஒக்டோபர் 30ஆம் திகதி, 54 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
21ஆவது மரணம், ஒக்டோபர் 31ஆம் திகதி, 40 வயதான, வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, மஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
22ஆவது மரணம், நவம்பர் 01ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
23ஆவது மரணம், நவம்பர் 02ஆம் திகதி, 61 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15, மோதறை உயனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
24ஆவது மரணம், நவம்பர் 03ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
25ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 46 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணித்த, கொழும்பு 02 (கொம்பனித் தெரு) ஐச் சேர்ந்த, ஆண் ஒருவர்.
26ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 68 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
27ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12 (வாழைத்தோட்டம் பகுதி) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
28ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
29ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (மட்டக்குளி பகுதி) ஐச் சேர்ந்த ஆண்ஒருவர்.
30ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 23 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (மோதறை பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
31ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 42 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
32ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 69 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
33ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (வெல்லம்பிட்டி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
34ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 88 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (கணேமுல்ல) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 13,419 பேரில் தற்போது 5,217 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 7,723 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 30 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 467 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment