சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி - 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் - News View

Breaking

Post Top Ad

Friday, November 20, 2020

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி - 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அலுவலகத்தின் கதவை மூடியபோது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

தற்போது மருத்துமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிவாஜிலிங்கம் நாளை காலைதான் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார் எனத் தெரிகின்றது.

24 மணி நேரத்துக்கு மருத்துவக் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad