அவுஸ்திரேலிய மதுபானங்களுக்கு சீனா 212 வீத வரி விதிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

அவுஸ்திரேலிய மதுபானங்களுக்கு சீனா 212 வீத வரி விதிப்பு

அவுஸ்திரேலிய வைன் வகை மதுபானங்களுக்கு தற்காலிகமாக கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. 

இன்று சனிக்கிழமை முதல் அத்தகைய மதுபானங்களுக்கான வரி 212 வீதம் வரை உயர்த்தப்படவுள்ளது. வைன் வகை மதுபானங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் அவுஸ்திரேலியா 5ஆம் இடத்தில் உள்ளது.

முன்னதாக குறைந்த விலையுடைய அவுஸ்திரேலிய வைன் தயாரிப்புகள் அதிக அளவில் சீனச் சந்தையில் குவிக்கப்படுவதா சீன வர்த்தக சங்கம் புகார் செய்திருந்தது. அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பின், கூடுதல் வரி விதிப்பு குறித்த தகவல் வெளியானது.

அவுஸ்திரேலிய வைன் தயாரிப்புகளுக்கான மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக சீனா உள்ளது. இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், அவுஸ்திரேலியாவின் மொத்த வைன் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவைச் சென்றடைந்தது. 

சீனா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் நிலக்கரி, சீனி, பார்லி மற்றும் இரால் உட்பட அவுஸ்திரேலிய இறக்குமதிப் பொருட்களை சீனா இலக்கு வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment