கட்டாரிலிருந்து 96 பேர், இந்தியாவிலிருந்து 53 பேர் இலங்கை வருகை - நேற்றையதினம் 13,286 PCR பரிசோதனைகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

கட்டாரிலிருந்து 96 பேர், இந்தியாவிலிருந்து 53 பேர் இலங்கை வருகை - நேற்றையதினம் 13,286 PCR பரிசோதனைகள்

இன்று கட்டாரிலிருந்து 96 பேர், இந்தியாவிலிருந்து 53 பேர் உள்ளிட்ட 149 பேர் இலங்கை திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இன்று (28) காலை கட்டாரின் டோஹா நகரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம், 44 பேர் வருகை தந்துள்ளதோடு, UL 218 எனும் விமானம் மூலம் 52 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் டோஹாவிலிருந்து திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து UL 1026 எனும் விமானம் மூலம் 53 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 47 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,088 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் (27) நாட்டில் 13,286 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment