நாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

நாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்

நாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார். 

கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுக்கு ஒதுக்கப்பட்ட 49 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் கெக்கிராவ கைலபொத்தான சந்தி தொடக்கம் குடி நீர் தாங்கி ஊடக நிதிகம ஊர் மத்தி வரையிலான சுமார் 2.9 கிலோ மீட்டர் பாதையினை கார்பட் இட்டு புணர் நிர்மானம் செய்வதற்கான வேலைகள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 20 ஆவது சீர் திருத்தம் என்பது JR.ஜெயவர்த்தன உடைய காலத்தில் போன்று ஜனாதிபதிக்கு சுதந்திரமாக தனது கடமைகளை செய்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு திருத்தமாகும். 

கடந்த காலங்களில் நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும்போது முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தங்கள், இடர்கள் குறித்து நாம் அனைவரும் நன்கறிவோம். 

இத்திருத்தத்தின் பின்னர் எமது நாட்டின் அபிவிருத்திப் பாதையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் புரட்சிக்கு எந்த சக்திகளாலும் இடையூறு விளைவிக்க முடியாது என்பதனால் எம்மால் ஓர் வளர்ச்சிடைந்த இலங்கையினை எதிர்காலத்தில் பார்க்க முடியும்.

இறைவனின் ஏற்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபாய தலைமையில் இலங்கை நாட்டின் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆட்சியாளருக்கு ஆதராவாகவும் பக்க பலமாகவும் இருக்கும் பொழுதுதான் முழு நாட்டையும் நமது மாவட்டத்தையும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் என்பதனை யாரும் மறுக்க முடியாது. 

கடந்த கால சம்பவங்கள் இதற்கு சான்றாக இருக்கின்றன. குறிப்பாக நான் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதி என்பதனால் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதே நாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையினையும் கிராம மட்டங்களிலான அபிவிருத்திகளையும் ஏற்படுத்துவதற்கு துணையாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கெக்கிராவ தொகுதி அமைப்பாளர் வீரசேன கமகே, மரதங்கடவள வீதியமைப்பு அதிகார சபையின் நிர்வாக பொறியியலாளர் சுஜித் மிரண்டா மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் உற்பட ஊர்வாசிகள் பலரும்கலந்துகொண்டிருந்தனர்.

ஐ.எம்.மிதுன் கான்
கனேவல்பொல

No comments:

Post a Comment

Post Bottom Ad