14 பேருக்கு கொரோனா - குருணாகல் மாவட்ட தபால் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

14 பேருக்கு கொரோனா - குருணாகல் மாவட்ட தபால் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்

குருணாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குருணாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதகாவும், தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள அவர், குருணாகல் பிரதேச தபால் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் குருணாகல் தலைமை தபால் நிலையத்தின் 14 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், குருணாகல் மாவட்டத்தில் தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மருந்து விநியோக நடவடிக்கைகளுக்காக, ஒரு சில ஊழியர்கள் ஏனைய தபாலகங்கள் மற்றம் உப தபாலகங்களுக்கு சென்று வந்துள்ளமை புலனாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தபால் ஊழியர்கள், அவர்களின் தொடர்பாளர்கள் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குருணாகல் மாவட்டத்தில் மருந்துகள் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும், அது தொடர்பில் வடமத்திய மாகாண செயலாளர், குருணாகல் மாவட்டச் செயலாளர், பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment