2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி மோசடியை அங்கீகரிக்கிறது - மங்கள சமரவீர - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி மோசடியை அங்கீகரிக்கிறது - மங்கள சமரவீர

(நா.தனுஜா)

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியை எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு அனுமதியளிப்பதன் ஊடாக 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி மோசடியை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருக்கிறார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் உள்ளடக்கப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான கொள்கையை விமர்சித்து மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது எவ்வித கேள்விகளுமின்றி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியை எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுப்பதன் ஊடாக 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி மோசடியை உத்தியோகபூர்வமான மன்னிக்கிறது.

இதனூடாக நிதிச் செயற்பாட்டு செயலணியின் பண மோசடி கண்காணிப்புப் பிரிவின் சாம்பல் பட்டியலுக்குள் மீண்டும் நாம் உள்வாங்கப்படப் போகிறோமா? ஏற்கனவே அதிலிருந்து வெளியேறுவதற்கு நிதியமைச்சினால் பல ஆண்டுகள் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad