கனடாவில் பொதுமக்களை விரட்டி விரட்டி வாளால் வெட்டிய இளைஞர் - 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் பலத்த காயம் - News View

About Us

Add+Banner

Sunday, November 1, 2020

demo-image

கனடாவில் பொதுமக்களை விரட்டி விரட்டி வாளால் வெட்டிய இளைஞர் - 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் பலத்த காயம்

unnamed
கனடாவின் கியூபெக் நகரில் இளைஞர் ஒருவர் பொதுமக்களை வாளால் வெட்டியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

கனடாவின் வரலாற்று சிறப்பு மிக்க பழைய கியூபெக் பகுதியில் கையில் வாளுடன் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர் நேற்று இரவு திடீரென பொதுமக்களை விரட்டி விரட்டி வெட்டத் தொடங்கினார். 

இதனால் பொதுமக்கள் சிதறி ஓடினர். மக்களை வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

வெறித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் ஒரு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் யார்? என அடையாளம் தெரியவில்லை. தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *