வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் தீ : பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் தீ : பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செட்டிக்குளம் நகரப்பகுதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் நிலையம் தீப்பற்றியெரிந்துள்ளது. 

இன்று (09.11.2020) காலை இடம்பெற்ற இத் தீ விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், செட்டிக்குளம் நகரில் அமைந்துள்ள ஹாட்வெயார் பொருட்கள் விற்பனையகம் காலை 7.00 மணியளவில் திடீரென தீப்பற்றியெரிந்துள்ளது. 

இதனை அவதானித்த பொதுமக்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதுடன் வவுனியா நகர சபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவலை வழங்கியிருந்தனர். 

குறித்த இடத்திற்கு அதிவேகமாக சென்றிருந்த நகர சபை தீயணைப்பு பிரிவினர் காலை 8.40 மணியளவில் தீயினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தீ விபத்து காரணமாக பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 

மின்சார ஒழுக்கு காரணமாக இவ் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என செட்டிக்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதுடன் தடவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad