மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் கொழும்பில் ஒளிந்திருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்தும் தற்போது விலாசத்தை மாற்றி மறைந்திருக்கும் குறிப்பிட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உடனடியாக விரும்பி முன்வந்து தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேல் மாகாணத்திற்கு வெளியே சென்றிருக்கும் ஊழியர்கள் 495 பேர் வரையில் உரிய முகவரியில் இல்லையெனவும், கொழும்பின் ஏனைய பிரதேசங்களில் அவர்கள் மறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அல்லது வைத்தியசாலையில் மாத்திரமே இருக்க வேண்டுமே தவிர வீட்டிலிருக்கக் கூடாதென இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தேசிய பொறுப்பாக கருதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் சுகாதார பிரிவிற்கு அறிவித்து உடனடியாக தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment