MT New Diamond கப்பல் நிறுவன உரிமையாளரிடமிருந்து 442 மில்லியன் ரூபா பணம் கிடைத்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறுவழங்கப்பட்ட பணமானது, கடல் மாசுபாட்டிற்கான இழப்பீட்டு பணம் இல்லை என்பதோடு, தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக செலவழிக்கப்பட்ட பணம் எனவும், சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.
கடல் மாசுபாட்டிற்கான இழப்பீட்டை குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment