திவுலபிட்டி பெண்ணுடன் தொடர்புடைய மேலும் 69 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, October 5, 2020

திவுலபிட்டி பெண்ணுடன் தொடர்புடைய மேலும் 69 பேருக்கு கொரோனா

திவுலபிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நெருங்கிய தொடர்புடைய 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு பாதிப்பிற்குள்ளானவர்கள், திவுலபிட்டி பிரதேசத்தில் குறித்த பெண் பணி புரிந்து வந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதுவரையில் குறித்த பெண்ணுடன் நெருங்கிப் பழகிய 150 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மீதமுள்ள அறிக்கை இன்று வெளிவரவுள்ளது.

திவுலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று (04) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அவரது 16 வயதுடைய மகளும் குறித்த தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment