திவுலுப்பிட்டியவில் 1500 பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ள 16 வயதுடைய மாணவி, கல்வி கற்க சென்ற பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (04) இரவு வரையில் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பரிசோதகர்கள் இடம்பெற்று வந்ததாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
விஷேடமாக ஒலி பெருக்கி ஊடக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதிபர் ஊடக அனைத்து மாணவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் அனுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திவுலுபிட்டிய பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளை சேர்ந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்றைதினம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணுடன் தொடர்புகளை பேணிய மேலும் 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் திவுலப்பிடியவில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினால், தற்போது பாடசாலை மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3471 அதிகரித்துள்ளது. இதில் 200 பேர், வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment