கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாநாடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாநாடு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாடு 20.10.2020 பல்கலைக்கழக மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களினால் பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு எனும் கருப்பொருளில் எழுதப்பட்ட 32 கட்டுரைகள் இம்மாநாட்டில் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இம்மாநாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் எப்.சி. ராகல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அமெரிக்க மிஷன் இணைப்பாளர் கலாநிதி தர்சன் அம்பலவாணர் இங்கு திறப்புரையாற்றினார்.

கலை, கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக மாநாட்டின் செயலாளர் முதுநிலை விரிவுரையாளர் எஸ். சந்திரகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment