துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவரான சந்தேக நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டிய - வித்யார்த்த மாவத்தையைச் சேர்ந்த 44 வயதான பெண்ணொருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டிக்கு இலக்காகியுள்ளார்.
சந்தேக நபரான அந்த பெண்ணின் கணவர் மனைவியை துப்பாக்கியால் சுட்டு விட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு 61 வயது மதிக்கத்தக்க நிக்கவெரட்டிய பகுதியிலுள்ள பிரபல ஆயுர்வேத வைத்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் இரவு தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்றிருந்தார்.
நிகவெரட்டிய பகுதியிலுள்ள குறித்த நபருக்கு சொந்தமான மற்றுமொரு காணிப் பகுதியில் மறைந்திருந்த நிலையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான குறித்த பெண்ணின் கணவர் மனைவியை சுடுவதற்காக பயன்படுத்திய துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் அந்த துப்பாக்கியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய பொலிஸ் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment