திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபானம் குடித்து விட்டு தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்ட ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வெருகல், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய எம்.தவராசா என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (3) மாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது குறித்த நபர் தினமும் மதுபானம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று மனைவி பிள்ளைகளுடன் சண்டையிடுவதாகவும், மனைவி வேறு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறியே சண்டையிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவதினம் அதிகமாக குடித்து விட்டு மனைவியைத் தாக்கியதோடு வீட்டில் உள்ள மண்ணெண்னை போத்தலை எடுத்து தலையில் ஊற்றி தனது மனைவி பிள்ளைகள் முன்னிலையில் தீ வைத்துக் கொண்டு கதறிய நிலையில் அயல் வீட்டார்கள் இணைந்து தீயினை அனைத்துள்ளனர்.
அதன் பின்னர் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment