கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட பகுதிகளுக்கு சமீபத்தில் சென்று வந்தவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திவுலப்பிட்டியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்பதை கண்டுபிடிக்க முடியாமலுள்ளது அதிகாரிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அந்தப் பகுதிக்கு சென்று வந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கம்பஹாவில் எவராவது காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டால் அல்லது அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக தங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment