அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களை சமூகத்திற்குள் நடமாடுமாறு பிரதம தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.
திவுலப்பிட்டியவில் கொரோனா நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் சுவாசப்பிரச்சினைக்காக கம்பஹா பொது மருத்துவமனைக்கு சென்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக அவர் மருந்தகமொன்றில் 28ம் திகதி மருந்துகளை பெற்றுள்ளார் என வைத்தியர் சுசத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணிடம் கொரோனாவிற்கான அறிகுறிகள் காணப்பட்டதால் அவரின் மாதிரிகள் பெறப்பட்டதுடன் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது அதன் மூலமே அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என வைத்தியர் சுசத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அவரின் நெருங்கிய சகாக்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன அவருடைய சகாக்கள் மருந்து பணியாளர்கள் உறவினர்கள் உட்பட அவருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் அடையாளம் காண வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் அதிகளவில் தொடர்பிலிருந்தவர்களிடம் பிசிஆர் சோதனை முதலில் இடம்பெறும் என தெரிவித்துள்ள சுசத் சமரவீர அவரிற்கு அருகில் சென்றவர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து சமூகத்திற்குள் சென்று பரவக்கூடியது என தெரிவித்துள்ள சுசத் சமரவீர அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களை சமூகத்திற்குள் நடமாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment