கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று முதல் நடைமுறை - சுகாதார அமைச்சர் பவித்ரா - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று முதல் நடைமுறை - சுகாதார அமைச்சர் பவித்ரா

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை இன்று முதல் கடுமையான விதத்தில் நடைமுறைப்படுத்தப் போவாதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்களை முகக் கவசங்களை அணியுமாறும், கைகளை கழுவுமாறும், சமூக விலக்கலை பேணுமாறும் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெருமளவு பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இசை நிகழ்வுகளையும் பொதுமக்கள் கலந்துகொள்ளக் கூடிய ஏனைய நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment