நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து வைக்கும் முயற்சியில் நீதியமைச்சு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து வைக்கும் முயற்சியில் நீதியமைச்சு

நீதி நிலைநாட்டும் நடைமுறையை செயற்திறன் மிக்கதாகவும், துரிதமானதாகவும் மாற்றுவதற்காக செயற்றிட்ட முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 

இதற்காக நீதியமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சர் ஐந்து குழுக்களை நியமித்துள்ளார்.

இந்தக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், குற்றவியல் சட்டங்களை திருத்தியமைத்தல், நீதிமன்ற வலைப்பின்னலை டிஜிட்டல் மயமாக்கல், வணிக மற்றும் சிவில் சட்டங்களைத் திருத்துதல் போன்ற பொறுப்புக்கள் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad