வவுனியாவில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 25, 2020

வவுனியாவில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்

வவுனியாவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா - இரணை இலுப்பைக்குளம் பகுதியிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலுப்பைக்குளம் – மண்கிண்டியில் வீட்டிற்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதிக்கு குறித்த சிறுவர்கள் இருவரும் தனது அம்மம்மாவுடன் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர்.

அவர்களின் அம்மம்மா விறகு வெட்டிக்கொண்டிருந்த போது மரத்தடியின் கீழ் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அங்கு மண்ணுக்குள் புதையுண்டிருந்த கைக்குண்டின் மீது இரும்பாலான பொருளைக் கொண்டு அடித்துள்ளனர்.

இதன்போது அக் கைக்குண்டு வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை இலுப்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad