வவுனியா நகருக்கு செல்வதற்கான பிரதான வீதி முடக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

வவுனியா நகருக்கு செல்வதற்கான பிரதான வீதி முடக்கம்

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற விபத்தினால் உயர் அழுத்த மின்சாரத் தூண் சேதமடைந்த நிலையில் குறித்த வீதியுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த வீதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மினசாரத் தூணுடன் இன்று அதிகாலை, பாரவூர்தி ஒன்று மோதியதில் மின்சார தூண் சேதமடைந்திருந்தது. 

இந்நிலையில் இது தொடர்பாக மின்சார சபைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் திருத்த வேலைகள் மேற்கொள்வதற்கு குறித்த வீதி முடப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், மின்சார கம்பத்தினை மாற்றி புதிய கம்பத்தினை அமைக்கும் பணிகள் மின்சார சபை ஊழியர்களால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

குறித்த திருத்தப்ப ணி காரணமாக ஹொறவப்பொத்தான வீதியூடாக நகருக்குள் வாகனங்கள் செல்வதற்கான பிரதான வீதி மூடப்பட்டுள்ளதுடன் பயணிகள் சூசைப்பிள்ளையார் குளம் வீதியுடாகவும் பள்ளிவாசல் பஜார் வீதியூடாகவும் மாற்று வழியினை பயன்படுத்துமாறு பொலிசாரால் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது. 

குறித்த மின் கம்பம் சரிந்து விழும் நிலையில் காணப்படுவதுடன் அப்பகுதியில் திருத்த வேலைகள் மேற்கொள்வதற்கு குறித்த வீதி முடப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment