ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவை புதன்கிழமை 07.10.2020 மங்களகம பிரதேசத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் மங்களகம தர்மராமய விஹாரை வளாகத்தில் இடம்பெறும் அனைத்து வகையான ஒருங்கிணைந்த சேவைகளையும் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடம்பெயர் சேவையில் பிரதேச செயலகத்தின் அனைத்து சேவைகளும் இடம்பெறுவதோடு பிரதேச சபை, சுகாதார, நீர்ப்பாசன, விவசாயத் திணைக்கள சேவைகள் தேசிய ஆளடையாள அட்டை சமூர்த்தி, உற்பத்தித் தொழிற்துறை விதாதா உட்பட இன்னோரன்ன சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
மங்களகம பிரதேசம் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் ஒரேயொரு பிரதேசம் மங்களகமயாகும்.
No comments:
Post a Comment