கல்குடா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழலிலிருந்து நாம் அனைவரும் பாதுகாப்பு பெறும் வகையில் செயற்படுவோம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

கல்குடா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழலிலிருந்து நாம் அனைவரும் பாதுகாப்பு பெறும் வகையில் செயற்படுவோம்

கல்குடா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழல், தயவுசெய்து வாசித்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள், ஆட்கொள்ளி நோய்களான கொரோனா மற்றும் டெங்கு நோய்களின் அதிகரிப்பு

அன்பார்ந்த பொதுமக்களே!

எமது பிரதேசத்தில் அன்மைக் காலமாக டெங்கு நோய் பரவி வருவதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கமும் தற்பொழுது நமது பிரதேசத்திற்கும் பரவியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்குள் நமது கோறளைப்பற்று மேற்கு, மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பல பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிர்ச் சேதமும் இடம்பெற்றுள்ளது.

இவ்விரண்டு நோய்களில் இருந்தும் நாமும் நமது சமூகமும் பாதுகாப்பு பெற வேண்டிய தேவைப்பாடு நம் அனைவருக்கும் காணப்படுகின்றது.

எனவே கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற வெளியில் செல்வதனை தவிர்த்து சுகாதார தேவைப்பாடுகளை கடைப்பிடிக்குமாறும் டெங்கிலிருந்து பாதுகாப்பு பெற நாம் அனைவரும் நாளைய நாளினை ஒதுக்கி பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுப்போமாக!

01. வீட்டுச் சூழலினை சுத்தம் செய்தல்.

02. வீட்டில் நீர் தேங்கக் கூடிய பொருட்கள் காணப்படின் அவற்றினை அகற்றுதல்.

03. கிணறுகளில் மீன்களை இட்டு மூடிகளிடல்.

04. சமையலறைகளில் நீர் தேங்கக் கூடிய இடங்கள் காணப்படின் அவற்றினை இல்லாமல் செய்தல் 

போன்ற வேலைகளை மேற்கொள்வதனால் இறைவனின் உதவியால் எமது பிரதேசத்திலிருந்து டெங்கு மற்றும் கொரோனா நோய்களை ஒழித்திடலாம்.

அன்பார்ந்த இளைஞர்களே......

தயவுசெய்து குறித்த இரண்டு நோய் தாக்கத்திலிருந்தும் எமது பிரதேச மக்களை பாதுகாக்க அனைவரும் சூழலை சுத்தம் செய்யுங்கள் மற்றும் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் இறுதியாக இவ்விரண்டு நோய்களிலும் இருந்து நமது மக்களை பாதுகாக்க இரவு பகலாக வேலை செய்யும் சுகாதார பரிசோதனை அலுவலக அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் அனைவருக்கும் கல்குடா மக்கள் சார்பான நன்றிகள்.

சட்டத்தரணி ஹபீப் றிபான்

No comments:

Post a Comment