கெமரூனின் பதற்றம் கொண்ட பிராந்தியத்தில் தனியார் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது எட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கெமரூன். இந்த நாட்டின் தென்மேற்கு நகரான கும்பாவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் பின்னணியில் அங்லோபோன் பிரிவினைவாதிகள் இருப்பதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் இந்தத் தாக்குதலை அறுவறுக்கத் தக்கது என்று பிரிவினைவாதத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில் 12 முதல் 14 வயதுடைய மாணவர்களே கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் கல்வி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்லோபோன் குழு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கத் தனிநாடு கோரி போராட்டத்தை ஆரம்பித்தது தொடக்கம் கெமரூனில் பதற்றம் அதிகரித்துள்ளது.
நாட்டின் பிரெஞ்ச் மொழி பேசும் சிறுபான்மையினரை ஆங்கிலம் பேசும் பெரும்பான்மை மக்கள் பாகுபடுத்துவதாக அங்லோபோன் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment