கடல் எல்லையை தீர்மானிக்க இஸ்ரேல் - லெபனான் முதல் சுற்று பேச்சுவார்த்தை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

கடல் எல்லையை தீர்மானிக்க இஸ்ரேல் - லெபனான் முதல் சுற்று பேச்சுவார்த்தை

தொடர்ந்து போர் சூழலில் இருக்கும் இஸ்ரேல் மற்றும் லெபனான் நீண்ட காலமாக நீடிக்கும் கடல் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை லெபனான் நகரான நகுராவில் ஐ.நா அமைதிகாக்கு படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும் இதன்மூலம்் உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை என்று இது தரப்பும் வலியுறுத்தியுள்ளன.

நேற்று ஒரு மணி நேரம் மாத்திரமே இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தை முடிவில் வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி மீண்டும் சந்திப்பதற்கு இரு தரப்பும் இணங்கியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

1948-49 இஸ்ரேல் - அரபு யுத்தம் தொடக்கம் போர் சூழலில் இருக்கும் லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே எல்லைகள் தொடர்பில் உடன்பாடு ஒன்று எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment