(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இந்நாட்டின் வரலாற்றில் முன்னுதாரண புருசராக பதியப்பட வேண்டும். அதற்கு அவர் முயற்சிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், பௌத்த பீடங்களே ஆமோதிக்காத திருத்தம் இது. அப்படியெனில் இருபதாவது யாருக்காக? சிங்கள மக்களின் நலனுக்காகவா? அல்லது பௌத்த மத நலனுக்காகவா? அல்லது அதிகாரம் மிக்கவரின் அதிகாரத்தை பலப்படுத்தவா? அல்லது அண்ணனை பலவீனப்படுத்தவா?
இந்த 20 ஆவது திருத்தத்தில் அதிகார குவிப்பை தவிர்த்து அர்த்தமுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கல் சரத்துக்களை இணைத்து நாட்டின் பல்லின, பல் மத, இரு மொழி சமத்துவத்தை ஏற்கக்கூடிய திருத்தங்களை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். அதனூடாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இந்நாட்டின் வரலாற்றில் முன்னுதாரண புருசராக பதியப்பட வேண்டும். அதற்கு அவர் முயற்சிக்க வேண்டும்.
அப்படி அவர் செய்தால் இந்நாட்டின் அரசியல் தலைவர்களில் புதியதொரு தேச பிதாவாக அவர் மிளிர்வார். இல்லையெனில் அவரது வரலாறு நடுநிலை வரலாற்றாசிரியர்களால் வேறு விதமாகவே பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment