கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான உலகத் தலைவர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான உலகத் தலைவர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகத் தலைவர்கள் பலர் இலக்கான நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். இவரது வயது மூப்பு மற்றும் உடல் பருமன் காரணமாக உடல்நிலை மிகமோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உலகளவில் பல தலைவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இணைந்துள்ளார்.

இதன்படி இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளன உலகத் தலைவர்கள் குறித்து காணலாம்.

முதன் முதலில் உலக தலைவர்களில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் ஈரான் நாட்டின் துணை ஜனாதிபதி மாஸௌமே எப்டேகர் தான். ஈரான் நாட்டின் மற்றொரு துணை ஜனாதிபதி இஷாக் ஜஹாங்கிரியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.

இதேபோல ஸ்பெயின் துணை பிரதமர் கார்மென் கால்வோ கடந்த மார்ச் 25 அன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானார், பின்னர் ஏப்ரல் 15 ஆம் திகதி அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி, சோஃபி கிராகோயர் ட்ரூடோவுக்கும் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய ஏப்ரல்-மே மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனாவில் பாதிக்கப்பட்டார். வீட்டில் தனிமையில் சில நாட்கள் இருந்த போரிஸ் ஜான்சன் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை முறையில் ஒக்சிஜன் வழங்கப்பட்டது. தீவிர மருத்துவக் கண்காணிப்புக்குப் பின்னர் ஜான்சன் குணமடைந்தார்.

தான் மட்டுமல்ல, மக்களையும் முகக்கவசம் அணியாதீர்கள் என்று முரட்டுத்தனமாகப் பிரச்சாரம் செய்து வியக்க வைத்தவர் பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ. மக்களை அதிகமாகக் கூட்டிவைத்து சமூக இடைவெளியின்றி பிரச்சாரம் செய்து மருத்துவர்களால் போல்சனாரோ விமர்சிக்கப்பட்டார். அதோடு ஆதரவாளர்கள் அனைவருக்கும் கைகொடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடலானார். 

இதனால் கோபமான அந்நாட்டு நீதிமன்றம் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டது. இறுதியில் போல்சனாரோவையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போல்சனாரோ தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து, அதன்பின் முகக்கவசம் அணியத் தொடங்கினார்.

கொரோனா வைரஸைப் பற்றிய கவலைகளை "மனநோய்" என்று விமர்சித்தவர் பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மேலும் உடல் ஆரோக்கியமாக இருக்க ஓட்கா குடிக்க பரிந்துரைத்தார், கடைசியில் இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த ஜூன் மாதம் ஹோண்டுராஸ் ஜனாதிபதி ஜூவன் ஓர்லாண்டே ஹெர்னான்டஸ், மற்றும் அவரின் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 15 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஜனாதிபதி ஓர்லாண்டே கொரோனாவில் இருந்து மீண்டார்.

கவுதமாலா நாட்டின் ஜனாதிபதி அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டிக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால், வீட்டில் இருந்தவாறே அரசுப் பணிகளைக் கவனித்து சில நாட்களி்ல குணமடைந்தார்.

டொமினிகன் குடியரசின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி லூயிஸ் அபினாடர் தனது பிரச்சாரத்தின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டார்.

இதேபோல், பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ஜீன்னி அனிஸ், டோமினிக் குடியரசின் புதிய ஜனாதிபதி லூயிஸ் அபிநடர் மற்றும் ஈரானில் பல முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் இந்தியாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment