துபாயிலுள்ள ஷேக் ஜாயித் பள்ளிவாசல் பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

துபாயிலுள்ள ஷேக் ஜாயித் பள்ளிவாசல் பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது

அபுதாபி மற்றும் புஜேராவில் உள்ள ஷேக் ஜாயித் பள்ளிவாசல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமக்கள் பார்வையிட மீண்டும் திறக்கப்படுகிறது.

அமீரக ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய நெருக்கடி, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

துபாயில் கொரோனா பாதிப்பு காரணமாக அபுதாபி, புஜேரா ஆகிய இடங்களில் உள்ள ஷேக் ஜாயித் பள்ளிவாசல், அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் நினைவிடம் ஆகியவற்றை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்வையிட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதையடுத்து பொதுமக்கள் இதனை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசலை பார்வையிட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், அமீரகத்தில் வசித்து வரும் பொதுமக்களும் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். இந்த பள்ளிவாசல்கள் அமீரகத்தின் கலாசாரத்துக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. 

இங்கு வரும் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இங்கு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு வரும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையானது தெர்மல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே பள்ளிவாசலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

அதிகமான வெப்பநிலை இருக்கும் பட்சத்தில் அவர்கள் பள்ளிவாசலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். சமூக இடைவெளி உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு கலாசார சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு பள்ளிவாசலின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மேலும் பள்ளிவாசலுக்குள் செல்லும் பிற சமய பெண்களுக்கு உடலை முழுமையாக மறைக்கும் வகையில் வழங்கப்படும் உடையும் வழங்கப்படமாட்டாது.

எனவே பள்ளிவாசல் குறித்த தகவலை சமூக வலைத்தளம் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமி நாசினி தெளிக்கப்படும். மேலும் கூட்டத்தை தவிர்க்க எலெக்ட்ரானிக் முறையில் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment