கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை எந்த நெருக்கடியும் இல்லாது சில கட்டுப்பாடுகளுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்க செய்தித் தொடர்பாளர் சுனில் ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது இலங்கை சுங்க அதிகாரிகள் இருவர் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், மேலும் 45 சுங்க அதிகாரிகள் தனிமைப்படுத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சுங்க அதிகாரிகள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் ஏனையவர்கள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இந்நிலையிலேயே கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த வாரத்திற்குள் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்று சுங்க செய்தித் தொடர்பாளர் ஜெனரல் சுனில் ஜெயரட்ன உறுதிப்படுத்தினர்.
No comments:
Post a Comment