ஊவா மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரும், திட்டமிடல் அதிகாரியும் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

ஊவா மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரும், திட்டமிடல் அதிகாரியும் கைது

ஊவா மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளரும் திட்டமிடல் அதிகாரியும் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளரின் காணியில் இடம்பெறும் வெல்லவாய பிரதேச சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டிய பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெற்றுக் கொள்ள உதவுவதற்காக திட்டமிடல் அதிகாரி 14,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இலஞ்சமாக பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தை பணிப்பாளருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதுடன், இலஞ்சம் பெறப்பட்டபோது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad