மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து இளைஞர் உடல் கருகி பலி - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து இளைஞர் உடல் கருகி பலி

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியவளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (25) இடம்பெற்ற இச்சம்பவத்தில், முள்ளியவளை 02ஆம் வட்டாரம் முள்ளியவளையைச் சேர்ந்த கவிஞன் (22) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முள்ளியவளை - ஒட்டுசுட்டான் வீதி, ஆலடிச் சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிவதை அவதானித்த அயலவர்கள் மற்றும், வீதியில் சென்றவர்களும் ஓடிச்சென்று தீயை அணைத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருந்தபோதிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வேறு வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தா? அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா? என்பது தெரியவரவில்லை. அதேவேளை ஆலமரத்துடன் மோதியே விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் சிக்கிய இளைஞர் முள்ளியவளை கமநல சேவைத் திணைக்களத்துக்கு அருகாமையில் வசிப்பவர் என்றும், அவர் மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றில் பணியாற்றிவருபவர் என்றும் தெரியவருகிறது.

மேலும் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன், முல்லைக்கீதன்)

No comments:

Post a Comment