பொரளையில் உள்ள லேடி ரிஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 07 குழந்தைகள் மற்றும் மூன்று தாய்மார்களும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானவர்கள் பேலியகொட மீன் சந்தை கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் பழகியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று உறுதியாகிய குறித்த குழந்தைகள் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment