களுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

களுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது அறை, 7 ஆவது அறை மற்றும் வெளிநோயாளர் பிரிவு நேற்று (24.10.2020) தற்காலிகமாக மூடப்பட்டது. 

வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது அறை, வெளி நோயாளர் பிரிவு ஆகியன கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக களுபோவில வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment