கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவரை துரத்திப் பிடித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவரை துரத்திப் பிடித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணம் கோப்பாயிலுள்ள தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் நேற்று மாலை தப்பியோடிய நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

தப்பியோடிய நபரை பிடித்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினரும் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியில் தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் நேற்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அவர் மது அருந்தும் நோக்கில் தப்பிச் சென்றார் என மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது கூறியுள்ளார். தப்பி ஓடிய நபரை மடக்கி பிடித்த ஊர் மக்கள், அவர்களுடன் தொடர்பை மேற்கொண்டவர்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment