தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படவிருந்த கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவித்துள்ளார்

நாளை மறுதினம் 10ம் திகதி சனிக்கிழமை முதல் நடாத்தப்படவிருந்த 2014/2015ம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகளே தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார்

குறித்த பரீட்சை நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment